பிபிசி தமிழோசை நிகழ்ச்சி- நவம்பர் 22

Nov 22, 2015, 05:10 PM

Subscribe

இன்றைய தமிழோசையில்...

*இலங்கைக்கு மூன்றுநாள் பயணமாக சென்றுள்ள அமெரிக்காவின் ஐநாவுக்கான நிரந்தர பிரதிநிதி சமந்தா பவர், வடக்கே முதலமைச்சர் மற்றும் போரில் பாதிக்கப்பட்ட பெண்களின் பிரதிநிதிகளை சந்தித்துள்ளது பற்றிய செய்திகள்...

*புலம்பெயர் இலங்கைத் தமிழர் அமைப்புகள் பலவற்றை தடைப் பட்டியலிலிருந்து இலங்கை அரசாங்கம் நீக்கியுள்ள நிலையில், அது தொடர்பில் உலகத் தமிழர் பேரவையின் கருத்துக்கள்

*மலேஷியா சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு இந்திய வம்சாவளி மக்களை சந்தித்து பேசியிருப்பது குறித்த தகவல்கள்

*சாதனைப் பெண்கள் பற்றிய பிபிசியின் சிறப்புத் தொடர் வரிசையில்- சென்னையில் TAXI ஓட்டும் பெண்கள் பற்றிய தகவல்கள்

*மறைந்து வரும் மங்கல இசை சிறப்புத் தொடரில் சீவாளி தயாரிப்பில் ஈடுபட்டுள்ளவர்களின் நெருக்கடிகள் பற்றி ஆராயும் 9-வது பாகம்