இலங்கை வலைப்பந்தாட்ட சங்கத்தின் துணைத் தலைவராக தமிழ் பெண் தேர்வு

Nov 23, 2015, 05:59 PM

Subscribe

இலங்கை வலைப்பந்தாட்ட சங்கத்தின் உயர்மட்ட நிர்வாகக் குழுவுக்கு தமிழ் பெண் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அச்சங்க நிர்வாகத்தினரை தேர்ந்தெடுக்க அண்மையில் நடைபெற்ற போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த செல்வி சுரேந்தினி சிதம்பரநாதன் துணைத் தலைவராக தேர்வானார்.

முன்னாள் வீராங்கனையான அவர் சர்வதேச அளவில் வலைப்பந்தாட்டப் போட்டிகளில் நடுவராகவும் பணியாற்றியுள்ளார்.

தனது அனுபவங்களை அவர் பிபிச் தமிழோசையிடம் பகிர்ந்து கொண்டார்.