டிசம்பர் 2, 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (02-11-2015) பிபிசி தமிழோசையில்
தமிழக தலைநர் சென்னையில் வரலாறு காணாத வெள்ளச்சேதமும் அதனால் ஏற்பட்டிருக்கும் பேரிடர் நிலைமையும் குறித்த நேரடிச் செய்தித்தொகுப்பு;
இந்த கன மழைகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் உரிய முன்னெச்சரிக்கை செய்யவில்லை என்கிற குற்றச்சாட்டு குறித்து சென்னை மண்டல இயக்குநர் ரமணனின் பதில்;
சென்னை பேரிடருக்கு தமிழக மற்றும் மத்திய அரசுகளின் நிவாரணப்பணிகள் பல இடங்களுக்கு செல்லவில்லை என்கிற புகார்களுக்கு மத்தியில் சமூக வலைத்தளங்கள் மூலம் பல தன்னார்வலர்கள் மேற்கொண்ட உதவிப்பணிகள் குறித்த ஒரு செவ்வி; தமிழக வெள்ளச் சேதங்கள் குறித்து இந்திய நாடாளுமன்றத்தில் இன்று பேசப்பட்டது குறித்த செய்தி;
இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தில் “வரணி” என்கிற இடத்தில் இருந்த இராணுவ முகாம் ஒன்றினுள் வதை முகாம் ஒன்று இருந்ததற்கான சான்றுகள் தன்னிடம் இருப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்திருப்பது குறித்த செய்தி;
மலையகப் பெண்கள் மத்திய கிழக்குநாடுகளுக்கு செல்லவேண்டுமானால் தோட்ட நிர்வாகத்தின் முன் அனுமதி வாங்கவேண்டும் என்கிற அரசின் அனுமதி வாங்கவேண்டும் என்கிற அரசின் உத்தரவை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது குறித்த செய்தி ஆகியவற்றைக் கேட்கலாம்.
