டிசம்பர் 3, 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Dec 03, 2015, 06:30 PM

Subscribe

இன்றைய (03-12-2015) பிபிசி தமிழோசையில்

தமிழக தலைநர் சென்னையிலும் அதையொட்டிய வடமாவட்டங்களிலும் மழை குறைந்திருந்தாலும் வெள்ளபாதிப்புகள் நீடிக்கும் நிலையில், சென்னை வெள்ளத்துக்குள்ளானவர்களின் தொடரும் குமுறல்கள்;

சென்னை வெள்ளத்தில் பொதுமக்களைப் போலவே பிபிசி தமிழோசையின் செய்தியாளர் முரளிதரனும் அவர் குடும்பமும் வீட்டை மூழ்கடித்த வெள்ளத்தில் சிக்கித்தப்பிய நேரடி அனுபவம்;

சென்னை மட்டுமல்லாமல் அதையொட்டிய பல வட மாவட்டங்களும் கடும் பாதிப்புகளை சந்தித்து வரும் நிலையில் கடலூர், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட நிலவரங்கள் குறித்த செய்திகள்;

இலங்கையில் உள்ளாட்சி மன்றங்களில் பெண்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்திற்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பது குறித்த செய்தி;

இலங்கையில் கடந்த செப்டம்பர் மாதம் ஆட்சியமைத்துள்ள புதிய அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பின்போதான வாக்கெடுப்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஆதரித்து வாக்களித்தாலும் அதில் இருக்கும் கட்சிகளில் ஒன்றான ஈபிஆர்எல்எஃப் கட்சியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த வாக்களிப்பைப் புறக்கணித்திருந்தது ஏன் என்பது குறித்த விளக்கம்;

சவூதியில் பணிபுரிந்த இலங்கை பெண்ணை கல்லெறிந்துக் கொல்லும் தண்டனை நாளை நிறைவேற்றப்படாது என்று கூறும் சவூதி அரேபியாவுக்கான இலங்கை தூதுவரின் செவ்வி ஆகியவற்றைக் கேட்கலாம்.