டிசம்பர் 4, 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Dec 04, 2015, 05:40 PM

Subscribe

இன்றைய (04-12-2015) பிபிசி தமிழோசையில்

தமிழக தலைநர் சென்னையில் மழைவெள்ள பாதிப்புகளுக்கு மத்தியில் தனியார் மருத்துவமனையில் 18 பேர் பலியானதாக எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்த செய்தி;

இதுபோன்ற சமயத்தில் மருத்துவமனைகள் எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கண்ணோட்டம்;

கடும் மழை பாதித்த சென்னை நகரில் கடந்த இரு நாட்களாக அத்தியாவசிய பொருட்களான, பால் , குடிநீர் போன்றவைகளுக்கே தட்டுப்பாடு நிலவுவதாக வரும் செய்திகளின் உண்மை நிலவரம் என்ன என்பது குறித்த செவ்வி;

மழையால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் நிவாரணப்பணிகளில் நிலவுவதாக கூறப்படும் பிரச்சனைகள் குறித்த நேரடித்தகவல்கள்;

இலங்கையைச் சேர்ந்த ரக்பி விளையாட்டுவீர்ர் வாசிம் தாஜுதீனின் மரணம் என்பது விபத்தல்ல கொலையே என்று கொழும்பு சட்டவைத்திய அதிகாரி நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளது குறித்த செய்தி;

இன்று காலமான இலங்கை மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான இஸட் மசூர் மவுலானா தனது 83 ஆவது வயதில் அவரது அரசியல் பங்களிப்பு குறித்த ஒரு செய்தித்தொகுப்பு;

சிரியா மீதான பிரிட்டனின் வான் தாக்குதலை பிரிட்டன் துவங்கியுள்ளது குறித்த பிபிசியின் செய்திக்குறிப்பு ஆகியவற்றைக் கேட்கலாம்.