இன்றைய ( டிசம்பர் 8) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்
தமிழ்நாட்டில் பெய்த மழையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு நிவாரணம் குறித்து பொதுமக்கள் மத்தியில் தொடர்ந்து நிலவும் அதிருப்தி பற்றிய செய்திகள்
வெள்ளப் பிரச்சனை காரணமாக சென்னையில் மார்கழி மாதம் நடக்கும் வருடாந்திர இசைக் கச்சேரிகளை ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு சென்னை இசை அக்காடமியின் தலைவர் என்.முரளி அளிக்கும் பதில்
சௌதியில் இலங்கைப் பணிப்பெண் கல்லால் அடித்துக் கொல்லப்பட விதிக்கப்பட்ட தண்டனை விவகாரத்தில் வழக்கை மீண்டும் விசாரிக்க சௌதி அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக இலங்கை கூறியிருப்பது பற்றிய செய்தி
இலங்கையின் அரச பள்ளிகளில் சீருடைகள் வழங்கும் நடைமுறையில் மாற்றம் செய்யப்படவிருப்பதாக அரசு அறிவித்திருப்பது பற்றிய சர்ச்சை குறித்த செய்திகள்
பின்னர் அனைவர்க்கும் அறிவியல் ஆகியவை கேட்கலாம்
