டிசம்பர் 9, 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Dec 09, 2015, 05:08 PM

Subscribe

இன்றைய (09-12-2015) பிபிசி தமிழோசையில்

இலங்கை இந்தியா இடையிலான சீப்பா என்கிற பொருளாதாரக் கூட்டுறவு ஒப்பந்தத்தில் இலங்கை கையெழுத்திடாது என்று பிரதமர் ரனில் விக்ரமசிங்க அறிவித்திருப்பது குறித்த செய்தி;

இலங்கையின் மருத்துவ, சட்ட மற்றும் பிற தொழில்சார் அமைப்புகள் இந்த ஒப்பந்தத்தை எதிர்ப்பது ஏன் என்பது குறித்து இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் டாக்டர் லதாகரன் நல்லையாவின் பேட்டி;

மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் பணிப்பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கூடிய சட்டங்களை உருவாக்கும்படி இலங்கை அரசுக்கு உத்தரவிடுமாறு கோரி இலங்கை உச்சநீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப் பட்டுள்ளது குறித்த செய்தி;

இலங்கையில் விடுதலைப்புலிகளினால் புதைத்து வைக்கப்பட்டிருந்ததாகக் கருதப்படும் தங்க நகைகளைத் தோண்டியெடுக்க முயற்சித்த சம்பவம் தொடர்பாக மூன்று பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது குறித்த செய்தி;

சென்னையின் வெள்ளச் சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளது குறித்த செய்தி;

தலைநகர் சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் ஏற்பட்ட உயிரிழப்புக்களின் மொத்த எண்ணிக்கையை வெளியிடுவதில் தமிழக அரசுக்கு என்ன சிக்கல் என்பது குறித்த ஒரு அலசல் சென்னை பெருவெள்ளத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களில் பெரும் பாதிப்பு பலரின் வாழ்நாள் சேமிப்பெல்லாம் ஒரே நாளில் வெள்ளத்தில் பறினபோனதால் லட்சக்கணக்கான குடும்பங்கள் நிர்க்கதியாக நிற்கும் நிலையில் அத்தகைய ஒருவரான சென்னை ஆட்டோ ஓட்டுநர் ஆண்டாளின் இழப்பு குறித்து அவரது பிரத்யேக பேட்டி;

சென்னை வெள்ளத்தில் ஏற்பட்ட பாதிப்புக்களுக்கு எந்த அளவுக்கு காப்பீட்டு நிறுவன உதவிகள் கிடைக்கும் என்பது குறித்து ஓரியண்டல் இன்ஸூரன்ஸ் என்கிற காப்பீட்டு நிறுவனத்தின் முன்னாள் அதிகாரி ஸ்ரீகாந்தின் பேட்டி;

சிரியாவில், அரச படையினரால் கைது செய்யப்பட்ட, ஃபரா என்ற பெண், கைதான பின்னர், தான் எதிர் கொண்ட சித்திரவதைகள் குறித்து பிபிசிக்கு அளித்த பேட்டியின் முக்கிய பகுதிகள் ஆகியவற்றைக் கேட்கலாம்.