"சென்னை வெள்ளம்: தமிழ் பதிப்புத்துறைக்கு 10 கோடி இழப்பு"
Share
Subscribe
சென்னை பெருவெள்ளத்தில் நகரின் பல துறைகளும் கடும் பாதிப்புக்களை சந்தித்திருப்பதாக செய்திகள் தொடர்ந்து வெளிவரத்துவங்கியுள்ளன. அதில் ஒன்றாக, குறைந்தது பத்து கோடிக்கும் அதிக மதிப்பிலான புத்தகங்கள் சென்னையில் பாழானதாக ஆரம்பகட்ட மதிப்பீடுகள் வெளியாகியுள்ளன. தமிழ் பதிப்புத்துறைக்கு ஏற்பட்டிருக்கும் மிக மோசமான பேரிழப்பு குறித்தும், அதன் காரணமாக இந்த ஆண்டின் சென்னை புத்தகக் கண்காட்சி ஒத்திப்போடப்படும் சாத்தியம் குறித்தும், இந்த மோசமான இழப்பில் இருந்து மீள தமிழ் பதிப்புத்துறையினர் தமிழக அரசிடம் எதிர்பார்க்கும் உதவிகள் குறித்தும் பாதிக்கப்பட்ட பதிப்பகங்களில் ஒன்றான சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பகத்தின் ஆசிரியர் ஆர் முத்துக்குமார் பிபிசி தமிழோசைக்கு அளித்த பிரத்யேக செவ்வி.
