டிசம்பர் 11, 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Dec 11, 2015, 06:28 PM

Subscribe

இன்றைய (11-12-2015) பிபிசி தமிழோசையில்

சென்னை பெருவெள்ளம் ஏற்பட்டு தலைநகரை நாசமாக்கியதற்கு செம்பரம்பாக்கம் உள்ளிட்ட சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக இருக்கும் மூன்று நீர்நிலைகளின் உபரி நீரையும் ஒரே நேரத்தில் திறந்துவிட்ட தமிழக அரசின் முடிவு காரணமா என்பதை அலசும் ஒரு ஆய்வுக்கண்ணோட்டம்;

சென்னை பெருவெள்ளத்தில் நகரின் பல துறைகளும் கடும் பாதிப்புக்களை சந்தித்திருப்பதாக செய்திகள் தொடர்ந்து வெளிவரத்துவங்கியுள்ளன. அதில் ஒன்றாக, குறைந்தது பத்து கோடிக்கும் அதிக மதிப்பிலான புத்தகங்கள் சென்னையில் பாழானதாக ஆரம்பகட்ட மதிப்பீடுகள் வெளியாகியுள்ள பின்னணியில் தமிழ் பதிப்புத்துறைக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பு குறித்து சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பகத்தின் ஆசிரியர் ஆர் முத்துக்குமாரின் செவ்வி;

இலங்கையின் திருக்கேதீஸ்வரத்தில் எடுக்கப்பட்ட மனித உடல் எச்சங்கள் மீதான ஆய்வை வெளிநாட்டில் மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதியளித்திருப்பது குறித்த செய்தி;

இலங்கையின் ரக்பி விளையாட்டு வீரர் வாசீம் தாஜூதீன் சந்தேக மரணம் தொடர்பிலான உரையின்போது இலங்கை நாடாளுமன்றத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது குறித்த செய்தி;

இந்திய அரசு சார்பில் இலங்கையில் கட்டப்படும் வீடுகள் மலையகத்திலும் கட்டப்படும் என்று இலங்கைக்கான இந்தியத் தூதர் தெரிவித்திருப்பது குறித்த செய்தி;

பாரிஸ் தாக்குதல்கள் நடந்து ஒரு மாதமாகின்ற நிலையில், பிரான்ஸில் அமலில் உள்ள அவசரநிலை சட்டங்கள் காரணமாக, அந்நாட்டில் முஸ்லிம்களின் சிவில் உரிமைகள் பாதிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் எச்சரித்துள்ளது குறித்த செய்தி ஆகியவற்றைக் கேட்கலாம்.