"தமிழக அரசு நினைத்தால் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்கலாம்"

Dec 16, 2015, 07:27 PM

Subscribe

பயிற்சி பெற்ற அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்கும் தமிழக அரசின் சட்டத்திற்கு எதிரான வழக்குகளில் இந்திய உச்சநீதிமன்றம் இன்று அளித்திருக்கும் தீர்ப்பில் தமிழக அரசின் சட்டம் ரத்து செய்யப்படவில்லை என்பதால் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கலாம் என்கிற தமிழக அரசின் சட்டம் தொடர்ந்து அமுலில் இருக்கிறது என்கிறார் டில்லியில் இருக்கும் சட்டவிவகார செய்தியாளர் ஜெ வெங்கடேசன்.

எனவே அந்த சட்டத்தைப் பயன்படுத்தி தமிழக அரசு நினைத்தால் பயிற்சி பெற்ற அனைத்து சாதியினரையும் தமிழக கோவில்களில் அர்ச்சகராக நியமிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

தேவைப்பட்டால் தமிழக அரசோ அல்லது தமிழக அரசின் அர்ச்சகர் பயிற்சி பெற்று வேலையின்றி பாதிக்கப்பட்டிருக்கும் அர்ச்சகர்களோ உச்சநீதிமன்றத்திடம் இந்த தீர்ப்பு குறித்து மேலதிக விளக்கங்கள் கோரலாம் என்றும் வெங்கடேசன் கருதுகிறார்.