டிசம்பர் 18, 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (18-12-2015) பிபிசி தமிழோசையில்
துப்புரவுக்கான உரிமையை ஒரு தனியான மனித உரிமையாக அங்கீகரித்து ஐநா தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ள பின்னணியில் இலங்கையின் மலையகத்தின் நிலைமை குறித்த ஒரு ஆய்வுக்கண்ணோட்டம்;
இலங்கையின் தேயிலைத்தோட்டத்தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் இன்றும் உடன்பாடு எட்டப்படாத நிலையில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு இடைக்கால கொடுப்பனவை கொடுக்க முடியாதபட்சத்தில் அரசாங்கத்திடம் தோட்டங்களை ஒப்படைக்குமாறு அமைச்சர் ஜான் செனிவிரத்ன தோட்ட நிர்வாகிகளிடம் கூறியதாக வெளியாகியுள்ள செய்தி;
இலங்கையில் வெறுப்புணர்வு பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுவதை குற்றமாக அறிவிக்கும் புதிய சட்டத்திருத்த முன்வரைவை திரும்பப் பெறுவதாக இலங்கை அரசு நேற்று அறிவித்திருந்தாலும் அந்த சட்டம் வேறொரு வடிவில் அரசால் கொண்டுவரப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் அச்சம் எழுப்பப்பட்டிருப்பது குறித்த செய்தி;
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் போட்டி ஒன்றின்போது, ஆட்டநிர்ணய சூதாட்டத்தில் ஈடுபடுமாறு சூதாட்ட தரகர் ஒருவர் அந்நாட்டு வீரர்களை அணுகியிருப்பதாக இலங்கை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளது தொடர்பான செய்தி;
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்த இந்திய உச்சநீதிமன்றம் விதித்திருக்கும் தடையை நீக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி திமுக ஆர்பாட்டம் அறிவித்திருப்பது குறித்த செய்தி
சென்னை வெள்ளத்தில் தமிழ்நாட்டின் தொழில் துறைக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த செவ்வி ஆகியவற்றைக் கேட்கலாம்.
