டிசம்பர் 22, 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (22-12-2015) பிபிசி தமிழோசையில்
இந்தியாவின் சிறார் தண்டனைச் சட்டத்தின் கீழ் கொலை, பாலியல் வல்லுறவு போன்ற குரூர குற்றங்களுக்கு தண்டிப்படுவதற்கான வயதை 18 ஆண்டுகள் என்பதை 16 ஆண்டுகளாக குறைக்கும் சட்டத்திருத்தத்துக்கு நாடாளுமன்ற மேலவை ஒப்புதல் அளித்திருப்பது குறித்த செய்தி;
இதுகுறித்த பொதுமக்கள் சிலரின் கருத்துக்கள்;
தமிழக வெள்ளச் சேத நிவாரணமாக மத்திய அரசிடமிருந்து சுமார் 26000 கோடி நிதியுதவி வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெ ஜெயலலிதா கோரியிருப்பது குறித்த செய்தி;
சர்ச்சையில் சிக்கிய பாடல் தொடர்பான வழக்கில் நடிகர் சிம்புவின் முன் ஜாமீன் மனு மீதான விசாரணை ஜனவரி 4ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப் பட்டிருப்பது குறித்த செய்தி;
இலங்கை ஊடகவியலாளர் பிரகீத் ஏக்நெலிகொட காணாமல் போனமை தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் இருக்கும் சிறையின் மருத்துவமனைக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விஜயம் செய்திருப்பது தொடர்பான சர்ச்சை குறித்த செய்தி;
புத்தாண்டை முன்னிட்டு அரச அதிகார்களுக்கு அன்பளிப்பு பொருட்களை பெற்றுக் கொடுக்கும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் படுமென்று ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளதுள்ளது குறித்த செய்தி;
தங்கக் கட்டிகளை தனது குதப்பகுதியில் மறைத்து இலங்கைக்குள் கொண்டு வரமுயன்ற நபர் ஒருவர் இலங்கையின் சுங்கப் பிரிவினரால் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளது குறித்த செய்தி;
அனைவர்க்கும் அறிவியல் ஆகியவற்றைக் கேட்கலாம்.
