டிசம்பர் 24, 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Dec 24, 2015, 04:44 PM

Subscribe

இன்றைய (24-12-2015) பிபிசி தமிழோசையில்

சிரியாவைச் சேர்ந்த அகதிகள் சிலர் ஜெர்மனியில் இருக்கும் தமது குடும்பத்தவருடன் இணைவதற்கு விசாவுக்கு விண்ணப்பிக்க சென்னைக்கு வந்திருப்பது குறித்த செய்திகள்;

தேமுதிக இன்னமும் பாஜக உடனான கூட்டணியிலேயே நீடிப்பதாக பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியிருப்பது குறித்த செய்தி;

இந்தியாவின் ஆளும் கட்சியான பாரதீய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் கிரிக்கெட் ஆட்டக்காரருமான கீர்த்தி ஆசாத் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுப்பட்ட குற்றத்திற்காக நேற்று கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில் சுப்பிரமணிய சாமியின் உதவியுடன் தாம் கட்சித்தலைக்கான தனது பதிலை அனுப்பவிருப்பதாக அவர் இன்று அறிவித்துள்ளது குறித்த செய்தி;

சமீபத்தில் இலங்கையில் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகுறித்து அந்த அமைப்பின் சார்பில் இன்று சில விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளது குறித்த செய்தி;

இலங்ககையில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் பொலித்தீன்களை பாவிப்பதற்கு எதிராக கடுமையான சட்டத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ள நிலையில் அதனை முறையாக நடைமுறைப்படுத்த அரசு சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் நிபுணரும் சட்டத்தரணியுமான ஜகத் குணவர்தன தெரிவித்துள்ளது குறித்த செய்தி;

நைஜீரியாவில் இயங்கிவரும் போக்கோ-ஹராம் தீவிரவாதிகளை ஏறக்குறை தோற்கடித்துவிட்டதாக அந்நாட்டு அதிபர் முஹமது புஹாரி தெரிவித்துள்ளது குறித்த செய்தி;

இந்த வாரத்தின் முற்பகுதியில், Brent ரக கச்சா எண்ணெய் விலை கடந்த பதினொரு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியை சந்தித்ததன் பன்முகத் தாக்கத்தை ஆராயும் பிபிசியின் செய்திக்குறிப்பு

இரத்த அழுத்த மாத்திரைகள் யாருக்கெல்லாம் கொடுக்கலாம் என்பது குறித்த புதிய பரிந்துரை தொடர்பான செய்தி ஆகியவற்றைக் கேட்கலாம்.