டிசம்பர் 25, 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (25-12-2015) பிபிசி தமிழோசையில்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தானுக்கான தனது முதலாவது பயணத்தை இன்று மேற்கொண்டுள்ளதன் பின்னணியை அலசும் ஆய்வுக்கண்ணோட்டம்;
இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் நேற்று கையெழுத்தான பாதுகாப்பு தளவாடங்கள் தொடர்பான ஒப்பந்தம் குறித்த ஒரு அலசல்;
அடுத்த பொங்கலை ஒட்டிய ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கோரி திமுக நடத்தவிருந்த உண்ணாவிரதத்தைத் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக கருணாநிதி அறிவித்திருப்பது குறித்த செய்தி;
தமிழ்நாட்டில் சூரிய ஒளி மின்சார உற்பத்தி நிறுவனங்களுக்கான தமிழக அரசின் சலுகைகளை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு மேல் நீட்டிக்க வேண்டும் என்கிற அந்த நிறுவன்ங்களின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்கக்கூடாது என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கோரியிருப்பது குறித்த செய்தி;
தமிழக அரசாங்கம் அறிவித்தபடி தமிழ்நாட்டில் சூரிய ஒளி மின் உற்பத்தி ஏன் இதுவரை துவங்கப்படவில்லை? சூரிய ஒளி மின் தயாரிப்புக் கட்டமைப்புக்கள் உருவாக்கப்படவில்லை என்பது குறித்து தமிழக அரசின் மின்வாரியத்தின் தாயாரிப்புப் பிரிவின் முன்னாள் உறுப்பினர் எஸ் ஆர் கிருஷ்ணமூர்த்தின் செவ்வி;
சரியாக பத்தாண்டுகளுக்கு முன்னர் தேவாலயத் தொழுகைக்கு நடுவே படுகொலை செய்யப்பட்ட தமிழ்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டிருப்பது குறித்த செய்தி; கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்த ஐம்பத்தொரு கைதிகளுக்கு இன்று விடுதலை கிடைத்ததையொட்டி இன்று அங்கு நடந்த கிறிஸ்மஸ் வழிபாட்டில் கலந்துகொண்ட பேராயர் கார்டினல் மால்கம் ரஞ்சித், நாட்டின் நீதிமன்ற நடைமுறையை விமர்சித்துப் பேசியுள்ளது குறித்த செய்தி ஆகியவற்றைக் கேட்கலாம்.
