"முதலமைச்சர் யாகம் நடத்துவது மக்களை திசைதிருப்பும் முயற்சி"
Share
Subscribe
தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் நடத்தியுள்ள ஆயுத சண்டி மஹா யாகத்துக்காக அரசு இயந்திரமும் பொதுப்பணமும் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக மார்க்கிஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மக்கள் நலனுக்கான பிரார்த்தனை என்று கூறி யாகம் நடத்துவது மாநிலத்தின் பிரச்சினைகளிலிருந்து மக்களை திசை திருப்பும் முயற்சி என்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தமிழோசையிடம் கூறினார்.
