ஜனவரி 4, 2016 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (04-01-2015) பிபிசி தமிழோசையில்
ஷியா மதகுரு ஒருவருக்கு சவுதி அரேபியா மரண தண்டனை நிறைவேற்றியதைத் தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையிலான தகராறும் பதற்றமும் மேலோங்கிவருவது குறித்த செய்தி;
இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்திருப்பது குறித்த செய்தி;
தமிழக அரசு மேலும் இரண்டு ஊடகங்கள் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருப்பது குறித்த செய்தி;
சர்ச்சைக்குரிய பாடல் பாடியது தொடர்பான விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று திங்கள்கிழமை நடிகர் சிம்புவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியிருப்பது குறித்த செய்தி;
இந்திய மீனவர்களின் படகு தாக்கி பாதிக்கப்பட்ட இலங்கை மீனவர் கொடுத்த புகாரில் ஏழு இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது குறித்த செய்தி;
இலங்கையில், தலைநகர் கொழும்பின் புறநகர்ப்பகுதியில் சிங்ஹ லே அதாவது சிங்கத்தின் ரத்தம் என்ற வாசகம் சிங்களத்தில் எழுதப்பட்டுள்ளதாக காவல்துறையிடம் செய்யப்பட்டிருக்கும் முறைப்பாடு குறித்த செய்தி;
இலங்கையின் மரண தண்டனையை ஒழிக்கும் விதத்தில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என்று வலியுறுத்தி நாட்டின் தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பரிந்துரைகளை முன்வைத்திருப்பது குறித்த செய்தி;
நிறைவாக விளையாட்டரங்கம் ஆகியவற்றைக் கேட்கலாம்.
