இன்றைய (ஜனவரி 5) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Jan 05, 2016, 04:27 PM

Subscribe

இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்

ஐ.எஸ் அமைப்பு வெளியிட்டுள்ள பிரசார வீடியோ ஒன்றில் தோன்றும் ஒருவர், பிரிட்டனைச் சேர்ந்த இந்துவாக இருந்து இஸ்லாத்துக்கு மாறிய ஒருவர் என்று கருதப்படுவதாக வரும் செய்திகள் குறித்த செய்திக்குறிப்பு

இலங்கைக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரிப் வருகை தந்திருப்பது பற்றிய செய்தி, பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் இலங்கை சென்றிருக்கும் நிலையில், அவரை சந்தித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவிக்கும் கருத்துக்கள்

சென்னையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்கு காரணமாக இருந்த்தாக கருதப்படும் செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிடப்பட்ட விவகாரம் குறித்து விசாரணை கோரி திமுக நட்த்திய ஆர்ப்பாட்டம் குறித்த செய்தி

பின்னர் அனைவர்க்கும் அறிவியல் ஆகியவை கேட்கலாம்