ஜனவரி 6, 2016 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (06-01-2016) பிபிசி தமிழோசையில்
ஹைட்ரஜன் அணுகுண்டுப் பரிசோதனையொன்றை முதல் தடவையாக நடத்தியுள்ளதாக வடகொரியா அறிவித்துள்ள நிலையில், அதன் செயலை சர்வதேச சமூகம் கண்டித்துள்ளது குறித்த செய்தி;
சிரியாவில் இருந்து அகதிகளாக பிரிட்டன் வந்திருக்கும் சுமார் 3000 சிறார்களை ஏற்கும்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்திருப்பது குறித்த செய்தி;
ஜெர்மனியில் புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது பெண்களுக்கு எதிராக நடந்த பாலியல் தாக்குதல் சம்பவங்கள் அரசியலில் சர்ச்சையாக மாறியிருப்பதுடன் அங்கு சென்ற அகதிகளுக்கு எதிரான ஒன்றாகவும் அது மாறியிருப்பதாக குறித்த செய்தி;
தமிழ்நாட்டை கடுமையாக பாதித்த வெள்ளச் சேதங்களை பார்வையிட தமிழகம் வந்த குழுவினர் சில இடங்களில் பாதிக்கப்பட்ட மக்களால் முற்றுகையிடப்பட்டதால் உருவான பரபரப்பு குறித்த செய்தி;
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் தண்டிக்கப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை விடுவிக்கும்படி பேரறிவாளனின் தாயார் தமிழக அரசிடம் கோரியிருப்பது குறித்த செய்தி;
இலங்கையின் வடகிழக்கே போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடுத்த மூன்றாடுகளுக்குள் 65,000 வீடுகளைக் கட்டித்தரும் திட்டம் ஒன்று தீட்டப்பட்டுள்ளதாக அரசு இன்று அறிவித்துள்ளது குறித்து மீள்குடியேற்றத்துறையின் துணை அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் செவ்வி;
இலங்கை அரசு பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்களை வாங்க ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவலில் எந்த உண்மையும் இல்லை என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி பிபிசியிடம் தெரிவித்துள்ளது குறித்த செய்தி;
இலங்கையின் வடமாகாண சுகாதாரத்துறை அமைச்சகம் இலவச அம்புலன்ஸ் சேவையொன்று ஆரம்பிக்கப்பட்டிருப்பது குறித்த செய்தி ஆகியவற்றைக் கேட்கலாம்.
