ஜனவரி 8, 2016 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (08-01-2016) பிபிசி தமிழோசையில் முதலில் செய்தியறிக்கை பின்னர் தொடரும் செய்தியரங்கத்தில்
இலங்கையில் ஆட்சிமாற்றத்துக்கு காரணமாக அமைந்த ஜனாதிபதி தேர்தல் நடந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடையும் நிலையில் இன்று கொழும்பில் நடந்த பல்வேறு நிகழ்வுகள் குறித்த செய்தித் தொகுப்பு;
தமிழ்நாட்டின் சல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்த இருந்த தடையை நீக்கி இந்திய அரசு பிறப்பித்த சிறப்பு உத்தரவுக்கு எதிராக விலங்குகள் நலவாரியத்தின் சார்பில் நீதிமன்றம் செல்லவிருப்பது குறித்த செய்தி;
திருகோணமலை மூதுர் பிரதேசத்திலுள்ள பாலத்தோப்புரில் 30 வருடங்களுக்கு மேலாக தனியார் காணிகளில் முகாமிடடிருந்த இராணுவம் காணிகளை உரிமையாளர்களிடம் மீளக் கையளித்துள்ளது குறித்த செய்தி தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை அடுத்தமாதம் முதல் நடக்கும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்திருப்பது குறித்த செய்தி ஆகியவற்றைக் கேட்கலாம்.
