இந்திய விஞ்ஞானத்துறை ஏன் முன்னேறவில்லை?

Jan 10, 2016, 05:17 PM

Subscribe

இந்தியாவின் 103 ஆவது விஞ்ஞான காங்கிரஸ் ஜனவரி மாதம் மூன்றாம் தேதி துவங்கி ஏழாம் தேதி முடிவடைந்திருக்கிறது.

கர்நாடகாவில் இருக்கும் மைசூரில் நடந்த இந்த மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இந்தியாவின் நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகளும் பங்கேற்றனர்.

அதேசமயம் நோபெல் பரிசு பெற்ற இந்திய வம்சாவளி விஞ்ஞானிகள் உள்ளிட்ட பலர் இந்த மாநாடு வெறும் கூடிக்கலையும் திருவிழா என்றும் இதனால் இந்திய விஞ்ஞானத்துறையில் பெரிய முன்னேற்றம் ஏற்படாது என்றும் கடுமையாக விமர்சித்திருந்தனர். பலர் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளாமல் தவிர்த்துக் கொண்டனர்.

இந்த மாநாட்டில் கலந்துகொண்ட சர்வதேச அளவில் அறியப்பட்ட விஞ்ஞானிகள் கூட இந்தியாவில் விஞ்ஞானத்துறையில் உரிய முன்னேற்றம் ஏற்படாததது குறித்து தமது கடும் விமர்சனங்களையும் கவலைகளையும் முன்வைத்திருக்கிறார்கள்.

இந்திய அரசாங்கம் விஞ்ஞானத்துறையின் ஆய்வுக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்வதில்லை என்று சுட்டிக்காட்டிய பல விஞ்ஞானிகள், இந்திய விஞ்ஞானத்துறையின் வளர்ச்சி என்பது விஞ்ஞான ஆய்வுத்துறையில் ஏற்படும் வளர்ச்சியை சார்ந்தே இருக்க முடியும் என்றும் வலியுறுத்தினார்கள்.

இத்தகைய வருடாந்த மாநாடுகள் இந்தியாவில் விஞ்ஞானக் கண்ணோட்டத்தை வளர்ப்பதற்கு எந்த விதத்திலும் பயன்படவில்லை என்று கடும் விமர்சனங்கள் எழுந்திருக்கும் பின்னணியில் இந்திய விஞ்ஞான காங்கிரஸ் மாநாடுகள் துவங்கியதன் உண்மையான நோக்கம் குறித்தும் அதன் இன்றைய பயன்பாடு அல்லது பயனற்ற தன்மை குறித்தும் எதிர்காலப் போக்கு எப்படி இருக்கவேண்டும் என்பது குறித்தும் சென்னை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், இந்தியாவின் அறிவியல் கல்வி குறித்து தொடர்ந்து ஆய்வு செய்துவருபவருமான முனைவர் மு அனந்தகிருஷ்ணன் பிபிசி தமிழோசைக்கு அளித்த விரிவான செவ்வியை நேயர்கள் இங்கே கேட்கலாம்.