இந்தியாவில் நீலப்படம் பார்ப்பவர்கள் அதிகரித்துள்ளது ஏன்?

Jan 10, 2016, 05:43 PM

Subscribe

உலகளவில் அதிகம் நீலப்படம் பார்பவர்களில் இந்தியர்கள் மூன்றாவது இடத்தில் உள்ளனர் என ஆய்வு முடிவொன்று கூறுகிறது.

போர்ண் ஹப் எனும் இணையதளம் வெளியிட்டுள்ள இந்த ஆய்வறிக்கையின் படி மிக அதிகப்படியாக நீலப்படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கையில் முதலிடத்தில் அமெரிக்காவும் அடுத்த இடத்தில் பிரிட்டனும் உள்ளன.

பெண்கள் இப்படியான படங்களை பார்ப்பது அதிகரித்துள்ளது எனவும் அந்த ஆய்வு கூறுகிறது.

அதிகப்படியானவர்கள் நீலப்படம் பார்க்கும் நாடுகளின் பட்டியலின் முதல் இருபது இடங்களில் 11 நாடுகள் ஐரோப்பாவில் உள்ளன.

உலகளவில் பிலிப்பைன்ஸ் நாட்டு மக்களே மிகவும் அதிகப்படியாக நாளொன்றுக்கு சுமார் 13 நிமிட நேரம் இதற்காக செலவிடுவதாகவும், கியூபா நாட்டு மக்களே மிகக் குறைவாக ஐந்தரை நிமிடங்கள் செலவு செய்வதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

பெண்கள் நீலப்படங்களைப் பார்ப்பதை பொருத்தவரை ஜமைக்கா முதலிடத்தில் உள்ளது.

44 சதவீதம் பெண்கள் என்று அந்த ஆய்வு தெரிவித்துள்ளது. 18 முதல் 24 வயதுக்குட்பட்டவர்களே அதிகமாக இப்படங்களில் ஆர்வம் காட்டுகின்றனர் எனக் கூறும் இந்த ஆய்வு நீலப் படங்களைப் பார்ப்பவர்களின் சராசரி வயது 35 எனவும் கூறுகிறது.

ஸ்மார்ட் ஃபோன் மூலம் 53% பேர் நீலப்படங்களைப் பார்க்கிறார்கள் என இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் ஸ்மார்ட் ஃபோன்களின் அதிகரிப்பு, இணையத்தின் வளர்ச்சி ஆகியவற்றாலேயே இந்த அளவுக்கு எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று சென்னையிலுள்ள பாலியல் மருத்துவ வல்லுநர் டாக்டர் நாராயண ரெட்டி பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

அவரது பேட்டியை இங்கே கேட்கலாம்.