ஜனவரி 11, 2016 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (11-01-2015) பிபிசி தமிழோசையில்
இலங்கையின் புதிய அரசியல் யாப்பு உருவாக்குவது தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்வதற்கான குழு மக்களிடம் கருத்துக் கேட்கவிருக்கும் விவரங்களை அறிவித்திருப்பது தொடர்பான செய்திகள்;
இலங்கையின் தலைநகர் கொழும்பின் குப்பைகளைக் கொட்டுவதற்கு போதிய இடமின்மையால் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்த ஒரு அலசல்;
தனக்கு எதிரான குற்றவியல் வழக்கு விசாரணையைத் தடை செய்யும்படி உச்சநீதிமன்ற நீதிபதி சரத் டி ஆப்று தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுப்படி செய்துள்ளது குறித்த செய்தி;
தமிழ்நாட்டில் ஆலயங்களில் விதிக்கப்பட்ட புதிய ஆடைக் கட்டுப்பாட்டுக்கு நீதிமன்றம் விதித்திருக்கும் தடையுத்தரவு குறித்த செய்தி;
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதித்த இந்திய அரசின் உத்தரவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்குகள் நாளை செவ்வாய்க்கிழமை (11-01-2015) விசாரிக்கப்படவிருப்பது குறித்த செய்தி;
பதான்கோட்டில் இந்திய விமானப்படை தளம் மீது பாகிஸ்தானிலிருந்து ஊடுருவிய சில தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்தில் பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்தால்தான், வெளியுறவுச் செயலர்கள் பேச்சுவார்த்தை நடக்கும் என்று இன்று இந்தியத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பது குறித்த ஆய்வுக்கண்ணோட்டம்;
ஆப்கானிஸ்தானுக்கும் தாலிபான்களுக்கும் இடையே சமாதானம் ஒன்றை ஏற்படுத்துவதை நோக்காகக் கொண்ட முக்கிய கூட்டம் ஒன்று இன்று துவங்கியுள்ளதன் பின்னணியை விளக்கும் பிபிசியின் செய்திக்குறிப்பு;
நிறைவாக விளையாட்டரங்கம் ஆகியவற்றைக் கேட்கலாம்.
