'ஜல்லிக்கட்டு தடை கோருவதில் நுண்ணரசியல் இருக்கிறது'
Share
Subscribe
தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு, விலங்கு வதை என்ற பெயரில் தடை கோருவது தவறு என்கிறார் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் நாட்டுப்புறவியல் துறையின் ஓய்வு பெற்ற பேராசிரியர் ஐ.முத்தையா.
சுமார் 15 அல்லது 20 ஆண்டுகளுக்கு முன்னர், ஜல்லிக்கட்டில் இது போன்று விலங்குகள் , மது கொடுக்கப்பட்டு, அல்லது அது போன்ற பிற துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகியிருக்கலாம், ஆனால் இப்போது ஜல்லிக்கட்டு என்பது சமீப காலங்களில் அரசின் கண்காணிப்பில் நடத்தப்படும் நிலையில், இது போன்ற விஷயங்கள் நடப்பதில்லை, என்றார் பேராசிரியர் முத்தையா.
ஜல்லிக்கட்டுக்கு விலங்கு உரிமை என்ற பெயரால் , தடை கோரும் அமைப்புகள் பெரும்பாலும், பெருநகர்ப் புறம் சார்ந்தே இயங்கும் நிலையில், இந்த கிராமப் புற விளையாட்டுக்கு எதிரான ஒரு நகர்ப்புற மனோபாவத்தின் விளைவானதாக இதைக் கருதலாம் என்று சிலர் கூறுவதில் உண்மையிருப்பதாகக் கூறிய முத்தையா, இதில் வடக்கு-தெற்கு போன்ற விஷயங்களும் அடங்கியிருக்கலாம் என்றார். மேலும், இந்த விளையாட்டைத் தடை செய்யக் கோருவதில், உள்நாட்டின காளை வகைகளை அழிக்கும் உள்நோக்கமும் தென்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
