ஜனவரி 13, 2016 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Jan 13, 2016, 05:28 PM

Subscribe

இன்றைய (13-01-2016) பிபிசி தமிழோசையில்

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு விதிக்கப்பட்ட தடையை இந்திய உச்சநீதிமன்றம் நீக்க மறுத்திருப்பது குறித்த செய்தி;

ஜல்லிகட்டு போட்டிகள் ஜாதிய உணர்வை வளர்க்கிறது என்று ஒருபக்கமும் ஜல்லிகட்டை எதிர்ப்பவர்களிடம் மேல்தட்டு வர்க்கப்பார்வை வெளிப்படுகிறது என்று மறுபக்கமும் வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்த ஆய்வு;

சமீபத்தில் தமிழக தலைநகர் சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களைக் கடுமையாக பாதித்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகள் எல்லோருக்கும் சமமாக கிடைக்கவில்லை என்று ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் சேகரித்த புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளது தொடர்பான செய்தி;

இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவுச் செயலர் எஸ் ஜெய்சங்கர் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனை சந்தித்து பேசியுள்ளது குறித்து அவரது செவ்வி;

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலையை கருணா குழுவே மேற்கொண்டுள்ளதாக சாட்சியாளர் ஓருவர் நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பது குறித்த செய்தி;

இலங்கையில் மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்பு மற்றும் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை முன்னேற்றுவதற்கான ஐந்தாண்டுத் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது குறித்த செவ்வி;

இலங்கையின் பவுத்த பிக்குகள் ஒழுக்கத்தை மேம்படுத்தும் முகமாக அரசாங்கம் நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பித்துள்ள சட்டமூலத்திற்கு சில பவுத்த பிக்குகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது தொடர்பான செய்தி ஆகியவற்றைக் கேட்கலாம்.