ஜனவரி 15, 2016 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Jan 15, 2016, 06:41 PM

Subscribe

இன்றைய (15-01-2015) பிபிசி தமிழோசையில்

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு விதிக்கப்பட்ட தடையைமீறி இன்று தமிழக கிராமங்கள் சிலவற்றில் மாடுகள் கட்டவிழ்த்துவிடப்பட்ட நிகழ்வுகள் குறித்து அத்தகைய நிகழ்வை நடத்திய காரைக்குடியின் மக்கள் மன்ற அமைப்பின் தலைவர் சா மி ராசகுமாரிடம் த செவ்வி;

இலங்கையின் யாழ்ப்பாணத்தில் நடந்த தேசிய பொங்கல் விழாவில் பேசிய வடமாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் பேசிய பரபரப்பான பேச்சு;

இலங்கையின் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு அமைச்சினால் முன்னெடுக்கப்படும் இவ்வாறான வீடமைப்புத் திட்டங்கள் பற்றியும், மீரியபெத்தையில் 2014-ம் ஆண்டில் மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடமைப்பு இன்னும் நிறைவேறாதுள்ளமை பற்றியும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜின் செவ்வி

திருகோணமலை சம்பூர் பிரதேசத்தில் சமீபத்தில் மீளக்குடியேறியுள்ள குடும்பங்கள் பத்து ஆண்டுகளுக்குப்பின்னர் தமது சொந்த வீடுகளில் பொங்கல் பொங்கி தைப்பொங்கலைக் கொண்டாடியிருப்பது குறித்த செய்தி;

சிரியாவிலிருந்து அகதிகளாக வருபவர்களை துருக்கி மீண்டும் பலவந்தமாக சிரியாவுக்கே அனுப்பி வைப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை துருக்கி மறுத்துள்ளது குறித்த பிபிசியின் புலனாய்வு;

சர்வதேச தடகள சம்மேளனம் ஊக்க மருந்து பயன்பாடு தொடர்பான குற்றச்சாட்டுகளை மூடி மறைத்து, தவறிழைத்தவர்களுக்கு ஆதரவாக அந்த சம்மேளனத்தின் தலைவராக இருந்தவரே செயல்பட்டார் என, ஊக்க மருந்துக்கு எதிரான சர்வதேச அமைப்பு வாடா அமைத்த சுயாதீன விசாரணைக் குழுவினர் கண்டறிந்துள்ளது குறித்த தகவல்;

இதுகுறித்து இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் ஒலிம்பியனும், சுமார் பத்தாண்டுகள் தெற்காசியாவின் மிக வேகமான மனிதர் என அறியப்பட்டவருமான டாக்டர் ஆர் நடராஜனின் செவ்வி ஆகியவற்றை கேட்கலாம்.