"ஜிபிஎஸ் ஐவிட இந்திய வழிகாட்டும் செயற்கைக்கோள் கட்டமைப்பு மேம்பட்டது"
Share
Subscribe
இந்தியாவின் சார்பில் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வழிகாட்டும் செயற்கைக்கோள் கட்டமைப்பின் ஒரு பகுதியாக ஐந்தாவது செயற்கைக் கோள் புதன்கிழமை (20-01-2016) விண்ணுக்கு ஏவப்படவிருக்கிறது.
GPS என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மேற்குலக வழிகாட்டும் செயற்கைக்கோள் கட்டமைப்பைவிட இந்தியா உருவாக்கும் வழிகாட்டும் கட்டமைப்பு மேம்பட்டதாகவும் துல்லியமானதாகவும் இருக்கும் என்கிறார் அறிவியல் எழுத்தாளர் மோகன் சுந்தரராஜன்.
இந்தியாவின் ஜிபிஎஸ் என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்த வழிகாட்டும் செயற்கைக் கோள் கட்டமைப்பின் முக்கியத்துவத்தையும் அதன் பயன்பாடுகளையும் அதன் தனித்துவத்தையும் விளக்குகிறார் மோகன் சுந்தரராஜன்.
அவர் பிபிசி தமிழோசைக்கு அளித்த விரிவான செவ்வியை நேயர்கள் இங்கே கேட்கலாம்.
