ஜனவரி 21, 2016 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (21-01-2016) பிபிசி தமிழோசையில்
இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பான நீதி விசாரணைகளுக்கு வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளது குறித்த செய்தி;
இலங்கையின் புதிய அரசியல் சாசனத்தை உருவாக்கும் பணியை இலங்கை அரசு முன்னெடுத்துள்ள பின்னணியில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் உயர்மட்டக் கூட்டம் இன்று கிளிநொச்சியில் கூடி அது குறித்து விவாதித்திருப்பது குறித்த செய்தி;
கொழும்பு துறைமுக நகரம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று இலங்கை பிரதமர் இன்று அறிவித்திருப்பது குறித்த செய்தி;
வெளிநாட்டவர்களுக்கு சிறுநீரக அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வதை தற்காலிகமாக நிறுத்துமாறு சுகாதார அமைச்சகம் தனியார் மருத்துவமனைகளுக்கு உத்தரவிட்டுள்ளது குறித்த செய்தி;
தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமல்படுத்துவது சாத்தியமில்லை என்று தமிழக அமைச்சர் தெரிவித்திருப்பது குறித்த செய்தி;
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு விதிக்கப்பட்ட தடையை மறுசீராய்வு செய்யும்படி கோரிய மனுவை இந்திய உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பது குறித்த செய்தி;
ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ஐந்து தலித் மாணவர்களில் ஒருவரான வேமுல ரோஹித் தற்கொலை செய்துகொண்டு இறந்த சம்பவம் தொடர்பான மாணவர் போராட்டம் தொடரும் சூழலில் அவரோடு இடைநீக்கம் செய்யப்பட்ட நான்கு மாணவர்கள் மீதான இடை நீக்கத்தை ரத்து செய்வதாக பல்கலைக்கழக நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது குறித்த செய்தி ஆகியவற்றைக் கேட்கலாம்.
