"தா கிருட்டினன், சங்கரராமன் கொலை வழக்குகளில் கிட்டாத தெளிவு ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் கிட்டும்"
Share
Subscribe
தமிழ்நாட்டின் முதல்வர் ஜெ ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதற்கு கர்நாடக அரசுக்கு அதிகாரமில்லை என்று அந்த வழக்கில் பிரதானமாக குற்றம் சாட்டப்பட்டவரான ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.
தமிழ்நாட்டில் நடந்ததாகக் கூறப்படும் குற்றச் செயலுக்கு மேல் முறையீடு செய்வது தமிழக அரசின் அதிகார வரம்புக்குட்பட்ட விவகாரம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
சொத்துக்குவிப்பு வழக்கு தமிழ்நாட்டில் இருந்து வேறு மாநிலத்துக்கு மாற்றப்பட்டதைப் போலவே திமுகவின் முன்னாள் அமைச்சர் தா கிருட்டினன் மற்றும் சங்கரராமன் கொலை வழக்குகளின் விசாரணைகளும் கடந்த காலத்தில் தமிழ்நாட்டுக்கு வெளியே மாற்றப்பட்டன.
அந்த இரு வழக்குகளின் தீர்ப்புக்கும் எதிராக மேல் முறையீடு செய்வதா வேண்டாமா என்கிற முடிவை அந்த வழக்குகளின் விசாரணை நடந்த மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் முடிவெடுத்த பின்னணியில் ஜெயலலிதாவின் தற்போதைய வாதம் சரியா?
இந்த கேள்வியை விரிவாக ஆராய்கிறார் டில்லியில் இருக்கும் செய்தியாளர் ஜெ வெங்கடேசன். அவரது பேட்டியின் விரிவான ஒலி வடிவத்தை நேயர்கள் இங்கே கேட்கலாம்.
