எஸ் வி எஸ் மருத்துவக் கல்லூரி எப்படி நடைபெற்றுள்ளது?

Jan 28, 2016, 06:16 PM

Subscribe

தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் கல்வி பயின்றுவந்த மூன்று மாணவிகள் மர்மான முறையில் உயிரிழந்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து தமிழகத்தில் சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் நடத்தப்படும் விதம் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.

அதுமட்டுமன்றி துணை மருத்துவப் படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படுவது தொடர்பில் பல வினாக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

கள்ளக்குறிச்சியை அடுத்துள்ள பங்காரம் என்ற இடத்தில் வயல்வெளிக்கு மத்தியில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்திருக்கிறன சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் எஸ்விஎஸ் கல்லூரிகள்.

ஒரே ஒரு மூன்று மாடி கட்டிடம் மட்டுமே இருக்கும் இந்தக் கல்லூரியில் ஹோமியோபதி படிப்பை வழங்கும் எஸ்விஎஸ் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையும் எஸ்விஎஸ் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தை வழங்கும் ஒரு கல்லூரியும் இயங்கிவந்துள்ளன.

இவையெல்லாம் தவிர, அந்த ஒரே கட்டிடத்தில்தான் மாணவர்களின் விடுதி, மருத்துவமனை, கல்லூரியின் வகுப்பறைகள், சோதனைச் சாலை, உரிமையாளரின் குடியிருப்பு ஆகியவையும் இருந்துவந்தன.

அங்கு நேரில் சென்று ஆராயந்த பிபிசி தமிழோசையின் தமிழக செய்தியாளர் தயாரித்து வழங்கும் சிறப்பு பெட்டகத்தை இங்கே கேட்கலாம்.