ஜனவரி 29, 2016 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (29-01-2016) பிபிசி தமிழோசையில்,
ஜப்பானிய மத்திய வங்கி நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக எதிர்மறையான வட்டி வீதங்களை இன்று அறிவித்துள்ளது குறித்த ஆய்வுக்கண்ணோட்டம்;
இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று நாடாளுமன்றத்தில் ஊடகங்கள் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்கள் ஊடகங்கள் மீது விடுக்கப்பட்ட ஒரு அச்சுறுத்தலென சுதந்திர ஊடக அமைப்பு தெரிவித்துள்ளது குறித்த செய்தி;
இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் பல்வேறு துறைகளிலும் முதலீடு செய்வதற்கு 25ற்கும் மேற்பட்ட சர்வதேச நாடுகள் முன் வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறித்த செய்தி;
இலங்கையின் அடுத்த சட்டமா அதிபர் பதவிக்கான நியமனம் தொடர்பில் அரசியல் சர்ச்சை எழுந்துள்ளது குறித்த செய்தி;
தமிழ்நாட்டில் எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது நடந்த பிரபல ராபின் மெய்ன் ஊழல் வழக்கில் 29 ஆண்டுகள் வழக்கு நடந்து இறுதியாக இன்று அளிக்கப்பட்ட தீர்ப்பில் 5 பேர் குற்றவாளிகள் என்று தண்டிக்கப்பட்டுள்ளது குறித்த செய்தி;
மலாயாப் பல்கலைக்கழகத்தின் தமிழ் நூலகம் இனி அங்கு பயிலும் மாணவர்களுக்கு மட்டும்தான் என்ற விதிமுறை அமலாக்கப்பட்டுள்ளதன் மூலம் அந்த நூலகத்தின் பயன்பாடு வெகுவாக குறைந்து பின் படிப்படியாக நூலகமே மூடப்படும் சாத்தியம் அதிகரிக்கும் என்கிற ஆய்வுமாணவர்களின் அச்சம் தொடர்பான செவ்வி;
கடந்த சில ஆண்டுகளில் ஐரோப்பிய ஒன்றிய கடவுச்சீட்டுக்களை பயன்படுத்தி ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பிரிட்டனுக்குள் வந்துள்ள விவகாரம் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது குறித்த செய்திக்குறிப்பு ஆகியவற்றைக் கேட்கலாம்.
