பிப்ரவரி 3, 2016 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Feb 03, 2016, 07:06 PM

Subscribe

இன்றைய (03-02-2016) பிபிசி தமிழோசையில்

தஞ்சம் கோரி ஆஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலம் வரும் அகதிகளை ஆஸ்திரேலியாவுக்கு வெளியே நவ்ரு மற்றும் மனுஸ் தீவுகளில் உள்ள முகாம்களில் தடுத்து வைக்கும் அரசின் கடுமையான கொள்கை சரியே என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது குறித்த செய்தி;

இஸ்ரேலுக்கு வரும் அகதிகளை அந்நாட்டு அரசாங்கம் ரகசியமாக வேறு நாடுகளுக்கு அனுப்புவதாக எழுந்துள்ள புகார்கள் குறித்து பிபிசியின் புலனாய்வு செய்தி;

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் நீடிப்பதா வேண்டாமா என்பது குறித்து பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரனுக்கும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களுக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் வரைவு ஒப்பந்தத்தை ஏற்கும்படி கேமரன் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்திருப்பது குறித்த செய்தி;

இலங்கையில் நாளை கொண்டாடப்படவுள்ள தேசிய சுதந்திரத் தின விழாவில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அணி தெரிவித்துள்ளது குறித்த செய்தி;

யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்டு காணாமல் போனதாக கூறப்படும் குகன் மற்றும் லலித் ஆகியோர் தொடர்பான வழக்கில் சாட்சியமளிப்பதற்கு முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் ஆஜரானது குறித்த செய்தி;

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தலைவர் குமரன் பத்மநாதன் தொடர்பான விசாரணைகளில் இந்திய காவல்துறையின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளும்படி கூறப்படும் யோசனைமீது கவனம் செலுத்தும்படி மென் முறையீட்டு நீதிமன்றம் சட்ட மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளது குறித்த செய்தி;

தமிழ்நாட்டின் மரக்காணத்தில் 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தில் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்த 6 பேரும் குற்றவாளிகள் என நிருபிக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு விழுப்புரம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது குறித்த செய்தி ஆகியவற்றைக் கேட்கலாம்.