பிப்ரவரி 5, 2016 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (05-02-2015) பிபிசி தமிழோசையில்
இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இலங்கைக்கு சென்றுள்ளது குறித்து சிலோன் டுடே நாளிதழின் மூத்த செய்தியாசிரியர் அனந்த் பாலகிட்ணரின் ஆய்வுக்கண்ணோட்டம்;
சம்புர் அனல் மின் நிலைய திட்டத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணையகத்தில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது குறித்த செய்தி;
இலங்கையில் நடைபெற்றதாக கூறப்படும் சட்டவிரோத சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை தொடர்பான விசாரணை அறிக்கை ஒன்று சுகாதார அமைச்சரிடம் கொடுக்கப்பட்டிருப்பது குறித்த செய்தி;
தமிழக அரசு ஊழியர் மீதான ஊழல் புகாரை விசாரிக்க அரசின் முன்அனுமதி தேவை என்னும் தமிழக அரசாணைக்கு எழுந்துள்ள எதிர்ப்பு குறித்த செய்தி;
இதற்கிடையே தமிழக முதலவர் ஜெயலலிதா மீதான ஊழல் வழக்கின் விசாரணை மீண்டும் உச்சநீதிமன்றத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறித்த செய்தி;
கடற்கரை நகரான சென்னையில் புதிதாக துவங்கியிருக்கும் காற்று வியாபாரம் குறித்த ஒரு பெட்டகம்;
சிரிய அரச எதிர்ப்பாளர்கள் வசமிருக்கும் எலப்போ நகரில் தீவிரமாகியிருக்கும் தாக்குதல் காரணமாக அங்கிருந்து பல்லாயிரக் கணக்கானவர்கள் வெளியேறியுள்ளது குறித்த செய்தி ஆகியவற்றைக் கேட்கலாம்.
