போப்-ரஷ்ய மரபுவாத திருச்சபை தலைவர் சந்திப்பு: ஒரு பார்வை
Share
Subscribe
கிறிஸ்தவ சரித்திரத்தில் கடந்த ஆயிரம் ஆண்டுகளில் இல்லாத வகையில், கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவரான போப் ஃபிரான்சிஸும், ரஷ்ய மரபுவாத திருச்சபையின் தலைவரான பாட்ரியார்க் கிரில்லும் கியூபாவில் சந்தித்து பேசியுள்ளனர். இந்தச் சந்திப்பின்போது உலகெங்கும் உள்ள கிறிஸ்தவ மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் நெருக்கடிகள் குறித்து பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது. இவர்களிடையேயான சந்திப்பு, சித்தாந்த ரீதியில் பிளவுபட்டுள்ள கிறிஸ்த்தவத் திருச்சபைகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று கருத்துக்கள் வெளியாகியுள்ளன. பல ஆண்டுகளாக திருச்சபைகளை ஒருங்கிணைக்க எடுக்கப்பட்ட முயற்சிகளை போப் பிரான்சிஸ் முடுக்கிவிட்டுள்ளார் என பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார் அமெரிக்காவின் ஒரேகான் மாநிலம் போர்ட்லாந்திலுள்ள மல்ட்நோமா பல்கலைக்கழகத்தின், இறையியல் மற்றும் பரஸ்பர கலாச்சாரக் கற்கைகள் துறையின் பேராசிரியரும், திருச்சபை சரித்திரத்தில் தேர்ச்சி பெற்றவருமான முனைவர் மார்ட்டின் அல்ஃபோன்ஸ். கிறிஸ்தவ திருச்சபை பிளவுபடும், பின்னர் பிரிந்தவர்கள் கூடுவார்கள் என இயேசு கிறிஸ்து தனது கடைசி பிரார்த்தனைக் கூட்டத்தில் தெரிவித்திருந்தது இப்போது நடைபெறத் தொடங்கியுள்ளது என்பது போலவும் இந்தச் சந்திப்பைக் கருத முடியும் எனவும் முனைவர் மார்ட்டின் அல்ஃபோன்ஸ் தெரிவித்தார். அவர் பிபிசி தமிழோசைக்கு அளித்த பேட்டியை இங்கே கேட்கலாம்.
