பிபிசி தமிழோசை நிகழ்ச்சி- பிப்ரவரி 14

Feb 14, 2016, 05:12 PM

Subscribe

இன்றைய தமிழோசையில்...

  • இலங்கையின் வடக்கு மாகாணசபையின் புதிய ஆளுநராக பொறுப்பேற்றுள்ள முன்னாள் மேல்மாகாண முதலமைச்சர் ரெஜினோல்ட் குரே பிபிசிக்கு அளித்துள்ள பேட்டி....

  • கிழக்கே, முஸ்லிம்கள் பெருவாரியாக வாழும் காத்தான்குடி பிரதேசத்தில், காதலர் தினத்துக்கு எதிரான சுவரொட்டி பிரசாரம்

*இலங்கையில் காதலர் தினத்தை ஒட்டிய காலத்தில் இளம் பெண்களின் தற்கொலைகள் அதிகரிப்பதாகக் கூறும் விளையாட்டுத் துறை அமைச்சின் மருத்துவர் அசங்க விஜேரத்னவின் கருத்து...

  • தமிழகத்தில், சென்னையில் காதலர் தினக் கொண்டாட்டங்களுக்கு எதிராக, பாரத் இந்து முன்னணி நடத்திய 30 நாய்கள் முத்தமிடும் கண்டனப் போராட்டம் பற்றிய செய்திகள்...

  • காதலர் தினக் கொண்டாட்டங்களுக்கு எதிரான போராட்டங்களை கடுமையாக விமர்சிக்கும் திராவிடர் கழகத்தின் பேச்சாளர் வழக்கறிஞர் அருள்மொழி தமிழோசைக்கு அளித்த செவ்வி...

  • ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தின் அண்மைய சம்பவங்களின் பின்னணியில், லஷ்கர்-ஏ-தொய்பா இயக்கம் இருப்பதாக உள்துறை அமைச்சர் சுமத்தும் குற்றச்சாட்டுக்கள்

  • ஈழத்துப் பாடல்கள் சிறப்புத் தொடரின் நான்காம் பாகம்