இன்றைய (பிப்ரவரி 15) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Feb 15, 2016, 04:23 PM

Subscribe

இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்

டில்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் சங்கத் தலைவர் மீது தொடரப்பட்ட தேசத்துரோக வழக்கு விசாரணைக்கு வந்திருந்த பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக வரும் செய்திகள் பற்றி பல்கலைக்கழக பேராசிரியர் சுஜாதா தெரிவிக்கும் கருத்துக்கள்

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணனை கொல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவை, அவர் தடைவிதித்து, தான் தலித் என்பதால் பாரபட்சம் காட்டப்படுகிறேன் என்று குற்றம் சாட்டியிருப்பது பற்றிய செய்தி

இலங்கையில் வரதட்சணை முற்றிலுமாக தடை செய்யப்படவேண்டும் என்று ஜேவிபி கோரியிருப்பது பற்றிய செய்தி

இலங்கை தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் செயல்பாடு எப்படி இருந்த்து என்பது குறித்த ஒருபேட்டி

பின்னர் விளையாட்டரங்கம்

ஆகியவை கேட்கலாம்