பிபிசி தமிழோசை நிகழ்ச்சி- மார்ச் 06
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்...
இலங்கையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ்க் கைதிகளின் உடல்நிலை மோசமடைந்துவரும் நிலையில், போராட்டத்தைக் கைவிடுமாறு அவர்களை கோருவதற்கு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவு..
ஆஸ்திரேலியாவுக்கு படகு மூலம் செல்ல முயன்ற 17 பேர் இலங்கைக் கடற்படையால் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறித்த செய்திகள்..
எச்ஐவி வதந்தி காரணமாக பள்ளிக்கூடம் மறுக்கப்பட்ட 6-வயது சிறுவனை கொழும்பில் பிரபல பள்ளிக்கூடம் ஒன்றில் சேர்க்கவுள்ளதாக கல்வி அமைச்சர் பிபிசிக்கு அளித்த பேட்டி..
மதுரை, திருமங்கலம் அருகே உச்சபட்டி பகுதியில் இலங்கை அகதி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தால் ஏற்பட்டுள்ள போராட்டங்கள் குறித்த செய்தி..
இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் அச்சம் காரணமாக முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது பற்றிய குறிப்பு..
ஈழத்துப் பாடல்கள் சிறப்புத் தொடரின் 7-ம் பாகம்..
