பிபிசி தமிழோசை நிகழ்ச்சி- மார்ச் 07
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்...
இலங்கையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ்க் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மீண்டும் யாழ்ப்பாணத்தில் நடந்துள்ள ஆர்ப்பாட்டம்..
முக்கிய நகரங்களில் வசிக்கும் மக்களை பதிவு செய்யும் நடவடிக்கையில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் இலங்கை காவல்துறையினர் இறங்கியுள்ளது பற்றிய குறிப்பு..
வடக்கு கிழக்குக்கு வெளியே வாழும் தமிழ் மக்களுக்காக நிலச்சார்பற்ற அதிகார அலகு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று முன்வைக்கப்படும் யோசனை..
தமிழகத்தில் இலங்கை அகதி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள பின்னணியில், அங்கு அகதிமுகாம்களின் நிலைமை குறித்த ஓர் ஆய்வுக் கண்ணோட்டம்..
தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பான தகவல்களுக்காக சிறப்பு கைபேசி செயலி ஒன்று அறிமுகமாகியுள்ளது பற்றிய செய்தி..
விளையாட்டரங்கம்..
