மார்ச் 11, 2016 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (11-03-2016) பிபிசி தமிழோசையில் கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருந்துவரும் தமிழக் கைதிகள் தங்கள் உண்ணாவிரதத்தைக் கைவிடப் போவதாக வந்திருக்கும் செய்தி, தேர்தலில் வெற்றிபெறுவதற்காக இலங்கையின் முந்தைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்ததாகக் கூறப்படும் விவகாரம் குறித்து பஷில் ராஜபக்ச பிபிசிக்கு அளித்த பதில்கள், இலங்கையில் உள்ளூராட்சித் தேர்தல்கள் தள்ளிப்போடப்பட்டிருப்பது குறித்து எழுந்த சர்ச்சை தொடர்பான செய்திகள், தமிழ்நாட்டில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தனித்தே போட்டியிடப் போவதாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அறிவித்திருப்பது குறித்து ஒரு செவ்வி ஆகியவை இன்றைய பிபிசி தமிழோசை நிகழ்ச்சியில் இடம்பெற்றுள்ளன.
