மார்ச் 14, 2016 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (14-03-2016) பிபிசி தமிழோசையில் தமிழ்நாட்டில் உடுமலைப்பேட்டையில் ஜாதிக்கு வெளியே திருமணம் செய்துகொண்ட இளைஞர் கொல்லப்பட்ட சம்பவத்தில், பெண்ணின் தந்தை சரணடைந்திருப்பது;
தமிழ்நாட்டில் விவசாயிகள் தனியார் வங்கிகளில் கடன்வாங்குவது குறித்தும் அவற்றால் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்தும் ஒரு செவ்வி;
இலங்கையில், நாடு முழுவதும் ஏற்பட்ட மின்சாரத் தடையை அடுத்து மின் நிலையங்களுக்கு ராணுவப் பாதுகாப்பு அறிவிக்கப்பட்டிருப்பது குறித்த தகவல்கள்;
கருப்புப் பண முறைகேடு தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவுக்கு பிணை வழங்கப்பட்டிருப்பது குறித்த தகவல்கள்;
விளையாட்டு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளைத் தாங்கிவரும் விளையாட்டு அரங்கம் ஆகியவை இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில் இடம்பெற்றிருக்கின்றன.
