மதுரை தேர்தல் களம்:ஒரு பார்வை
Share
Subscribe
தமிழக அரசியலில் மதுரைக்கு முக்கிய இடமுள்ள போதிலும், நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல் குறித்த பரபரப்பு பெரிய அளவில் காணப்படவில்லை. திருவிழா நகரம் என்றழைக்கப்படும் மதுரையில் கடந்த காலங்களிலும் தேர்தல் ஒரு திருவிழாவைப் போலவே இருக்கும். ஆனால் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகள் பிராச்சார வேகத்தை பெருமளவுக் குறைத்துள்ளன என்கிறார் அங்கு சென்றுவந்த பிபிசி தமிழோசையின் செய்தியாளர் முரளிதரன். கடுமையான வெயிலும் தேர்தல் பிரச்சாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன எனவும் அவர் கூறுகின்றார். எந்தக் கட்சியும் பெரிதாக போஸ்டர்கள் மூலமோ, சுவர் விளம்பரங்கள் மூலமோ பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை எனவும் அவர் சொல்கிறார். மதுரை மாவட்டத்தில் தற்போது, மதுரை மேற்கு, கிழக்கு, வடக்கு, தெற்கு, மத்தியத் தொகுதி, திருப்பரங்குன்றம், திருமங்கலம், மேலூர், சோழவந்தான், உசிலம்பட்டி என பத்துத் தொகுதிகள் இருக்கின்றன. வேட்பாளர்களைப் பொருத்தவரை அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுமே ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களையே அதிக எண்ணிக்கையில் வேட்பாளர்களாகக் களமிறக்கியிருக்கின்றன. முரளிதரன் தயாரித்து வழங்கும் சிறப்பு பெட்டகத்தை இங்கே கேட்கலாம்.
