கல்விக்கடன் விவகாரம், தமிழக மாணவனின் தற்கொலை பற்றி கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு
Share
Subscribe
தமிழகத்தில், கல்விக்கடனை திருப்பி செலுத்த முடியாத மதுரையைச் சேர்ந்த மாணவர் லெனின் தற்கொலை செய்துகொண்டதை அடுத்து, மாணவர் அமைப்புகள் போராட்டத்தில் இறங்கியுள்ளன.
தமிழ்நாட்டில் கல்விக் கடனை வசூலிக்கும் பொறுப்பை பொதுத்துறை வங்கிகள் தனியார் கடன் மீட்பு நிறுவனங்களிடம் அளித்துள்ளது பெரும் சிக்கலாக மாறியுள்ளது என்று கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு பி பி சி தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் படிப்பை முடித்தவுடன் வேலை கிடைக்கும் நிலை இல்லாத சூழல் உள்ளது என்றும் அவர்களை துன்புறுத்தி கடனை வசூலிக்கும் முறை கண்டிக்கத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அதிமுக தேர்தல் பிரச்சாரத்தின் போது கடனை செலுத்த முடியாத மாணவர்களின் கடன் தொகையை அரசு செலுத்தும் என்ற அறிவிப்பு இன்னும் செயல்படுத்தாதது பற்றியும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
