புலிகளின் ஆயுளும், அவை சந்திக்கும் பிரச்சனைகளும்: ஒரு பார்வை

Aug 18, 2016, 11:20 AM

Subscribe

இந்தியாவின் புகழ்பெற்ற புலிகளில் ஒன்றான 'மச்சிலி' புலி, இன்று ரண்தம்பூர் தேசிய பூங்காவில் இறந்துள்ளது.

புலிகளின் வாழ்நாள், வயோதிகம் காரணமாக அவை சந்திக்கும் பிரச்னைகள் குறித்து டெல்லி வனவிலங்கு பூங்காவில் பணியாற்றிய முன்னாள் வனவிலங்கு மருத்துவர் பன்னீர்செல்வம், நம்மிடம் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

பொதுவாக, புலிகளின் வாழ்நாள் 18 முதல் 21 வருடங்கள் மட்டுமே என்றும், 18 வயதை தாண்டி, அவற்றின் பற்கள் மற்றும் உடல்பாகங்கள் வலுவிழந்துவிடும் என்று கூறினார்.

மேலும், இந்த கலந்துரையாடலில் புலிகள் கணக்கெடுப்பு குறித்தும், அதன் நம்பகத்தன்மை குறித்தும் பன்னீர்செல்வம் எடுத்துரைத்தார்.