இலங்கையில் காணாமல் போனோருக்கான அலுவலக சட்டம்: செயலணி ஏமாற்றம்

Aug 23, 2016, 04:51 PM

Subscribe

இலங்கையில் கூட்டு எதிர்க்கட்சியினரின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில், காணாமல் போனோருக்கான அலுவலக சட்டத்திற்கு சபாநாயகர் அங்கீகாரம் அளித்துள்ள போதிலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பரிந்துரைகளை கவனத்தில் கொள்ளத் தவறியிருப்பது, ஏமாற்றமளிப்பதாக உள்ளது என நல்லிணக்கப் பொறிமுறைக்கான பொதுமக்கள் கலந்தாலோசனைச் செயலணி தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பரிந்துரைகளைக் கொண்ட தனது இடைக்கால அறிக்கையை அரசு கவனத்தில் எடுக்காமல் விட்டுவிட்டது என அந்தச் செயலணி சுட்டிக்காட்டியுள்ளது.

இது குறித்து அக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான ஒய்வு பெற்ற பேராசிரியர் சித்ரலேகா மௌனகுரு தன் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.