காதலில் மாத்திரமே

Aug 27, 2016, 10:57 AM

காதலில் மாத்திரமே கவிதையாய் வர்ணித்துக் கொட்டுவதற்கும் காணாதபோது கண்ணீர் முட்டுவதற்கும் சின்னசின்ன பிழைகளுக்காய் பூட்டுவதற்கும்-பின் சிறையுடைத்து அன்பைக் காட்டுவதற்கும் எண்ணுகிறது

காதலில் மாத்திரமே இரவுகளை எல்லாம் விழிப்பதற்கும் எண்ணி எண்ணி களிப்பதற்கும் நீ உண்ட மிச்சத்தை ருசிக்கவும் நான் பேசும் மொழிகளை ரசிக்கவும் முடிகிறது

காதலில் மாத்திரமே பத்தடி தூரம் சென்றும் புhர்துப் பார்த்துப் பிரியமறுக்கும் மறைந்து விட்ட மறுகணமே குறைந்தது குறுஞ் செய்தி வரும்

காதலில் மாத்திரமே இதழ் கலந்த முத்தங்களும் இனிக்க இனிக்க சத்தங்களும் ஏதிர்பார்க்காத வருகைகளும் ஏதிர்பார்த்தும் ஏமாற்றங்களும் இலவசமாகின்றன http://vellisaram.blogspot.com/search?q=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87++