காவிரி நதி நீர் பங்கீடு பிரச்சனையால் தமிழக விவசாயத் தொழிலார்களின் சந்திக்கும் பாதிப்புகள் பற்றிய பேட்டி

Sep 28, 2016, 05:00 PM

Subscribe

காவிரி நதி நீர் பங்கீடு பிரச்சனையால் தமிழக விவசாயத் தொழிலார்கள் சந்திக்கும் பாதிப்புகள் பற்றி தமிழக விவசாய சங்கத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி பிபிசி தமிழோசையிடம் பேசினார். அவர் பெண் விவசாயத் தொழிலாளர்கள் பலர் தங்களது குடும்பத்துடன் தஞ்சாவூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இருந்து வாழ்வாதாரம் தேடி வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். ஒரு ஆண்டில் விவசாய வேலை கிடைக்கும் 60 நாட்களின் அவர்கள் ஈட்டும் வருவாய் தான் அந்த ஆண்டு முழுவதும் அவர்களின் செலவுகளுக்கு சேமித்து வைக்கும் பணமாக இருக்கும் என்றார்.

''விவசாயத் தொழிலில் பெண் தொழிலாளர்களின் பங்கு பெரிய அளவில் உள்ளது. அவர்கள் தான் நாற்றுகள் நடுவது, களை எடுப்பது, பயிர் அறுவடை செய்வது வரை பல்வேறு வேளைகளில் தங்களது உழைப்பைச் செலுத்துகிறார்கள். தற்போது ஏற்பட்டுள்ள நதி நீர் பங்கீடு அவர்களின் வேலைவாய்ப்பைப் பறித்துள்ளது, '' என்றார் தமிழ்ச்செல்வி.

பாதிக்கப்பட்ட விவசாயத் தொழிலார்களுக்கு பனையளிக்கும் மாற்று ஏற்பாடுகள் பற்றி பேசும் போது, தமிழ்ச் செல்வி, ''தமிழக அரசு 100 நாள் வேலை திட்டத்தின் கால அளவை அதிகப்படுத்தலாம். மேலும் அதில் அளிக்கப்படும் கூலி தொகையை அதிகப்படுத்தினால் தற்போது நிலவும் சிரமத்தில் இருந்து விவசாயத் தொழிலாளர்கள் ஓரளவு காப்பாற்றப்படுவார்கள்,'' என்றார்.