காலமான தாய்லாந்து அரசர் பூமிபோன் அடூன்யடேட் வாழ்க்கைக் குறிப்பு மற்றும் தாய்லாந்தில் உள்ள நிலை குறித்த தமிழரின் பேட்டி

Oct 13, 2016, 02:37 PM

Subscribe

தாய்லாந்து அரசர் பூமிபோன் அடூன்யடேட், உலகில் நீண்ட காலம் அரசராக இருந்தவர். தனது ஆட்சிக்காலத்தில், பெருமளவிலான ராணுவப் புரட்சிகளைச் சந்தித்த நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு முக்கியப் பங்காற்றியவராக அவர் பார்க்கப்படுகிறார். அரசியலுக்கு அப்பாற்பட்டு, உயர்ந்த தலைவராகப் பார்க்கப்பட்ட அதே நேரத்தில், அரசியல் கொந்தளிப்பான சூழ்நிலைகளில் சில நேரம் அவர் தலையிட்டிருக்கிறார். வரையறுக்கப்பட்ட அதிகாரங்களுடன் சட்டபூர்வ மன்னராக இருந்தாலும், பெரும்பாலான தாய்லாந்து மக்கள் அவரை கடவுளின் அவதாரமாகவே மதித்தார்கள். அவரின் வாழ்க்கைக் குறிப்பு மற்றும் தாய்லாந்தில் தற்போது உள்ள சூழல் குறித்து தாய்லாந்து தமிழ் சங்கத்தின் தலைவர் தேவதாசின் பேட்டி அடங்கிய பதிவு