மவுலிவாக்கம் கட்டிடம் இடிக்கப்பட்டதன் விளைவு குறித்த பேட்டி
Share
Subscribe
சென்னையை அடுத்துள்ள மவுலிவாக்கத்தில் அபாயகரமான நிலையில் உள்ள 11 மாடி கட்டிடம் இன்று இடிக்கப்பட்டது. கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28ஆம் தேதி மவுலிவாக்கத்தில் ஒரு கட்டிடம் விபத்துக்குள்ளானது. அதில் கட்டடத் தொழிலாளர்கள் 61 பேர் இறந்தனர். இந்த விபத்து குறித்து ஆராய்வதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் அமைக்கப்பட்ட குழு, மற்றொரு 11 மாடி கட்டடமும் ஆபத்தான நிலைமையில் இருப்பதால், அதனை இடிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இது குறித்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றமும், கட்டடம் உறுதித்தன்மையில்லாமல் உள்ள காரணத்தால், இடிக்க உத்தரவிடப்பட்டது. இது குறித்து இந்திய கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்கான தேசிய அறக்கட்டளையைச் சேர்ந்த சுரேஷ், இந்த கட்டிடம் இடிக்கப்பட்டது மற்ற வீட்டு மனை விற்பனையாளர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும் என்கிறார். ''பலரும் சென்னையில் வீடு தேவை என விரும்புவதால், வீட்டு மனை விற்பனையாளர்கள் பலர் விரைவாக வீடுகளை கட்ட வேண்டும் என்ற எண்ணுகின்றனர். பல விதிமுறைமீறல்களும் நடைபெறுகின்றன. ஆனால் இந்த வீடுகள் மிகவும் ஆபத்தானவை என்பதற்கு இந்த மவுலிவாக்கம் கட்டிடம் ஒரு சான்று. பல முதலீட்டாளர்கள் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தால், வழக்கு கிடப்பில் போடப்படும் என்று எண்ணினர். ஆனால் இந்த கட்டிடம் இடிக்கப்படுவது பலருக்கும் படமாக அமையும்,'' என்றார்.
இந்த விவரகரத்தில் பொது மக்களும் வீடுகள் வாங்க முதலீடு செய்யும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றார்.
