சசிகலா புஷ்பாவின் வழக்கறிஞர் தாக்கப்பட்டது குறித்து அவரது கருத்து
Share
Subscribe
சென்னையில் அ.தி.மு.கவிலிருந்து நீக்கப்பட்டப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சசிகலா புஷ்பாவின் ஆதரவாளர்கள் மீது ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய சசிகலா புஷ்பா, ''அதிமுகவின் பொது செயலாளர் பதவிக்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்வதற்காக தான் எனது வழக்கறிஞர் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்றார். நாளை ரகசிய முறையில் தேர்தல் நடைபெறவுள்ளதாக நாங்கள் அறிந்தோம். எனது வேட்புமனு, எனது வழக்கறிஞரின் வேட்புமனு மற்றும் மும்பையை சேர்ந்த மற்றொரு நபரின் வேட்புமனு ஆகியவற்றை தாக்கல் செய்ய சென்ற நேரத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளது,'' என்றார்.
