அதிமுகவை உடைக்க வேண்டிய தேவை பாஜகவிற்கு இல்லை : பொன் ராதாகிருஷ்ணன்

Jan 17, 2017, 05:39 PM

Subscribe

அதிமுகவை உடைக்க வேண்டிய தேவை பாஜகவிற்கு இல்லை என பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன், அதிமுக பொது செயலாளர் சசிகலாவின் கணவர் நடராஜன், அதிமுகவில் பிளவு ஏற்படுத்த பாஜக முயல்வதாக குற்றம்சாட்டினார். இது குறித்து பிபிசி தமிழோசையிடம் பேசிய பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், ''அதிமுகவை பலப்படுத்துவது அந்த கட்சியின் பொறுப்பு. அந்த கட்சியை உடைப்பதற்கான தேவை எங்களுக்கு இல்லை. எங்களது கட்சியை தமிழகத்தில் பிரதான கட்சியாக மாற்ற நாங்கள் உழைத்து வருகிறோம்,''என்றார் .