வட்டைக்க போறன் மச்சான்
Share
வாரன் மச்சான் ஒள்ளுப்பம் வரம்பக் கட்டிப்போட்டு வந்த தண்ணியெல்லம் வக்கடய புட்டுபோட்டாம்
வெள்ளாப்புல வாறத்துக்கும் வெளிச்சம் தெரியுதில- இப்ப புள்ளாப் பனிப்பெயிது புளுக்கம் வேற மதியம்
கூட்டம் வைக்கிறானுகளாம் மச்சான் குரக்கன் அரைக்கிற வேலையும் கிடக்கு-இதில நாட்டம் நமக்கில்ல என்ன போனா!!! கோயில ஒடச்சிப்போட்டான் கூடிக்கதைச்சி இருக்கம் குழு அமைச்சி கூடியவர குடியேத்தச் சொல்லிருக்கம்- நாங்க அரசாங் கட்சி இல்லையே! கொடுக்க ஒண்டுமில்ல என்டும்,
உரிமையை உடக்கூடாதென்று உசுப்பேத்துவானுகள் வேறென்ன? படுவான் கரை கிரான் வாகரை எல்லாம் திடகாத்திரம் இழந்து கிடக்கு புள்ள தின்ன சோறில்லாம மண்ண நம்பிக்கெடக்கம்
அறிவிருந்தா அபிவிருத்திய பேசுவான் அன்பிருந்தா அரவணைத்து பேசுவான் வடக்கைப் பாத்தாவது வாழவைக்க தெரியாதா? எடக்குமுடக்கா பேசி ஏமாத்தாதிங்கடா! -ஓ நம்மட சனம் பாவம்.
